பாடியவர்: கணியன் பூங்குன்றனார். கணிதத்தில் வல்லவராக இருந்ததால் இவர் கணியன் பூங்குன்றனார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. சங்க இலக்கியத்தில் இவர் இயற்றிய பாடல்கள் இரண்டு உள்ளன. ஒன்று, புறநானூற்றில் காணப்படும் 192 ஆம் பாடல். மற்றொன்று நற்றிணையில் உள்ள 226 ஆம் பாடல். இவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த பூங்குன்றம் என்ற ஊரினர். இவ்வூர் இப்பொழுது மகிபாலன் பட்டி என்று அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில் பூங்குன்றம் என்று அழைக்கப்பட்ட ஊர்தான் இப்பொழுது மகிபாலன் பட்டி என்ற குறிப்பு அவ்வூர்க் கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது.
பாடலின் பின்னணி: கணியன் பூங்குன்றனார் பரந்த மனப்பான்மை உடையவர்; இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதியவர். மக்கள் அனைவரையும் தமது உறவினராகக் கருதியவர். பரிசில் பெறுவதற்காக எந்த ஒரு மன்னரையோ அல்லது வள்ளலையோ புகழ்ந்து பாடாமல், இவர் உலக இயல்பைப்பற்றிய தம் கருத்தை இப்பாடலில் கூறியுள்ளார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி. உயிருக்கு உறுதியளிக்கும் இம்மை மறுமைக் கடன்களை எடுத்துக் கூறுதல்.
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
5 இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்
10 முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
அருஞ்சொற்பொருள்:
1. கேளிர் = உறவினர். 3. நோதல் = வருந்துதல்; தணிதல் = குறைதல். 5. முனிவு = கோபம், வெறுப்பு. 7. தலைஇ = பெய்து; ஆனாது = அமையாது. 8. இரங்கல் = ஒலித்தல்; பொருதல் = அலைமோதல்; மல்லல் = மிகுதி, வளமை. 9. புணை = தெப்பம். 10. திறம் = கூறுபாடு; திறவோர் = பகுத்தறிவாளர். 11. காட்சி = அறிவு; மாட்சி = பெருமை.
உரை: எல்லா ஊரும் எமக்குச் சொந்த ஊர்தான். எல்லோரும் எமக்கு உறவினர்தான். தீமையும் நன்மையும் பிறரால் வருவன அல்ல. அவை தாமே வருவன. துன்புறுவதும் துன்பம் தவிர்தலும் (மகிழ்தலும்) அதைப் போன்றவை தான். அதாவது துன்பமும் இன்பமும் பிறரால் வருவன அல்ல. அவையும் தாமே வருவனதான். சாதல் என்பது புதியது இல்லை; வாழ்தல் இனிமையானது என்று மகிழ்வதும் இல்லை. (உலகின் மேலுள்ள) வெறுப்பால் வாழ்வு இனியதல்ல என்று கூறுவதும் இல்லை. மின்னலுடன் வானத்திலிருந்து விழும் குளிர்ந்த நீர்த்துளிகள் மழையாகப் பெய்து, அளவிலடங்காது மலையில் உள்ள கற்களை அலைத்தொலிக்கும் மிகப்பெரிய ஆற்று நீராகச் செல்லும் வழியில் மிதந்து போகும் தெப்பம் போல், நமது (அரிய உயிர்) வாழ்க்கை, முறைப்படி அமையும் என்பதை அறிஞர்களின் அறிவுரைகளின் வழியே அறிந்தோம். ஆதலால், பெருமைக்குரிய பெரியோரைக் கண்டு ஆச்சரியப்படுவதும் இல்லை; சிறியோரை இகழ்தலும் இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
Simple yet great explanation. Thanks for the posts in your blog.
nice work visit mine
nice work visit mine
Exalant..!
அருமை ஐயா...,
தங்கள் தெளிவுரையில் பல
எம் ஐய்யப்பசிக்கு அமிர்தம் இருக்கும்
இன்னும் பல உரைகள் நோக்கி ஆர்வம்
Just see the intellect and observation our ancestors possess.Even if the same knowledge of our ancestors got transferred to next generations successfully, the world would have been a much much better place.
Just see the intellect and observation our ancestors possess.Even if the same knowledge of our ancestors got transferred completely through successive generations, the world aouwo have been a much much better place
சிறப்பான விளக்கம் கொடுத்த செம்மலுக்கு என் வணக்கம்,
ஈராயிரம் ஆண்டின் முன்னமே, வாழ்க்கை என்பது இயற்கையின் ஊடே இயைந்து வாழ்வது. அனைரையும் அன்புடனும் சமமாகவும் பாவிப்பது என்று பாடியிருப்பது தமிழனின் பகுத்தறிவை விளக்குகிறது. துன்பத்தைக் கண்டு துவளுவதும், இன்பத்தில் மகிழ்வதும் இல்லை என்பது மனதை சமநிலையில்வைப்பது. இது ஒரு பெரும் தத்துவம். தமிழன் உலகின் தலை சிறந்த பண்புடன் வாழ்ந்தான் என்பது இப்பாடலின் மூலம் அறியலாம்.
Wow great poem ....this line is suitable for ur life forever
I get the proper meaning for this wonderful song from you..
Nandri nanbaa..
Nandri Nanbaa..
Thanks a lot for posting your great work....
தாமின் புறுவது உலகின் புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
மிக எளிமையான தெளிவுரை. நன்றி.
நன்று
https://www.facebook.com/sundaravadivel.balasubramanian/posts/3781835811890779
Thanks for the post... I admire your work!!
Thank you for publishing this master piece with explanation in Thamil Globalisation, internationalism total environmental impact have all been touched so many years ago. Foresight expressed is remarkable
Nice
அன்பு மிகு பிரபாகரன் - அரியதொரு பாடலுக்கு எளிய உங்கள் விளக்கம் இதம்தரும் ஓர் அனுபவம். மிக்க நன்றி.
சூப்பர்
It's a great work you are doing. Keep Tamil glorious.
Dear Jeyan Joseph,
Thank you for your comments.
anbudan,
Prabhakaran
Nandru
தெளிவான விளக்கம்
நன்றி.
அன்புடன்,
பிரபாகரன்.
இந்த விளக்கத்துக்கும் முயற்சிக்கும் மிக்க நன்றி
அன்புடையீர்,
உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி. தொடர்ந்து படியுங்கள்.
இதற்கு பொருள் கொடுத்ததற்கு நன்றி ❤ உங்கள் பணி மகத்தானது ✨️
Post a Comment