Friday, October 18, 2019

புதிய வலைத்தளம்


அன்புடையீர்,
வணக்கம்.
என்னுடைய வலைத்தளப் பதிவுகளை படிக்கும் (பார்க்க்கும்) அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. என்னுடைய புறநானூற்று வலைத்தளங்களை, உலகில் பல நாடுகளில் உள்ளவர்கள் ஏறத்தாழ 150,000 முறை படித்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். குறுந்தொகைப் பதிவுகளை 50,000 த்துக்கும் அதிகமானவர்களும், Amazingkural என்ற வலைத்தளப் பதிவுகளை 30,000த்துக்கும் அதிகமானவர்களும் படித்துள்ளனர். இவர்களில் சிலர் என்னோடு மின்னஞ்சல் மூலம் தொடர்பிலும் இருக்கிறார்கள்.

அண்மையில், இதுகாறும் நான் எழுதிய திருக்குறள் சார்ந்த கட்டுரைகளை The Ageless Wisdom என்ற தலைப்பில், ஆங்கிலத்தில் ஒருநூலாக வெளியிட்டே.ன். அந்த நூலுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இப்பொழுது, புதிதாக ஒரு வலைத்தளம் ( https://thirukkuralkatturaikal.blogspot.com )ஆரம்பித்திருக்கிறேன். அதில் “திருவள்ளுவரும் திருக்குறளும்” மற்றும் “வள்ளுவத்தில் புதுமையும் புரட்சியும் “ என்ற தலைப்பில் இரண்டு கட்டுரைகளைப் பதிவு செய்துள்ளேன். தொடர்ந்து பல கட்டுரைகளை இந்த வலைத்தளத்தில் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளேன். ஆர்வமும் நேரமும் இருந்தால், இந்தக் கட்டுரைகளைப் படியுங்கள் என்றும் அவற்றை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் என்றும் அன்போடு வேண்டுகிறேன்.
நன்றி.
அன்புடன்,
பிரபாகரன்