Tuesday, March 19, 2013

நன்றி


அன்புடையீர்,
வணக்கம்.
புறநானூற்றுப் பாடல்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக நான் எழுதிவந்த உரைகள் முடிவடைந்தன. இதுவரை, தமிழன்பர்கள்  15,000 முறை என்னுடைய வலைத்தளங்களுக்குச் சென்று நான் பதிவு செய்துள்ள உரைகளைப் படித்ததாகப் (அல்லது பார்த்தாகப்) புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதுவரை என்னுடைய பதிவுகளைப் படித்தவர்களுக்கும் இனி படிக்கவிருப்பவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

முதல்  200 பாடல்களுக்கு நான் எழுதிய உரையை சென்னையில் உள்ள காவ்யா பதிப்பகத்தார் கடந்த ஆண்டு ஒரு நூலாக வெளியிட்டுள்ளனர். அந்த நூல் கிடைக்கும் விவரம்:
காவ்யா பதிப்பகம்
16, இரண்டாம் குறுக்குத் தெரு
டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை  600 024
தொலைபேசி: 044 – 2372 6882;  9840480232

அடுத் 200 பாடல்களுக்கான உரையை காவ்யா பதிப்பகத்தார் இந்த ஆண்டு வெள்யிடத் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, நானும் என்னுடைய நண்பர்களும் மாதமிருமுறை கூடிப் புறநானுற்றைப் படித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்தோம். சில சமயம், பல்வழி அழைப்பு (Teleconference) மூலம் கலந்துரையாடிக் கருத்துப் பரிமாற்றம் செய்தோம். இந்த ஆண்டு வாசிங்டன் வட்டாரத்தில் “புறநானூறு” என்ற தலைப்பில் ஒரு பன்னாட்டு மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மாநாட்டைப் பற்றிய செய்திகளை www.classicaltamil.org என்ற இணையதளத்தில் காணலாம்.

அந்த மாநாட்டில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்காக, “A brief Introduction to puranaanuuru” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அந்தக் கட்டுரையை இந்த வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளேன். இந்தக் கட்டுரை பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
 நாங்கள் புறநானூறு படித்தது மட்டுமல்லாமல், புறநானூறு தொடர்புள்ள கருத்தரங்கங்கள் நடத்திப் பலரையும் அவற்றில் ஈடுபடுத்தி, புறநானுற்றில் நாங்கள் புரிந்து கொண்டதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டோம். நானும் என் நண்பர்களும் புறநானூற்றைப் பரப்புவதற்கும் படிப்பதற்கும் செய்த முயற்சிகள் வீண்போகாது என்று நினைக்கிறேன்.
இனி, வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவு செய்யாமல், அவ்வப்பொழுது, புறநானூறு தொடர்பான சில கட்டுரைகளை மட்டும்  பதிவு செய்யலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றி கூறி, தற்காலிகமாக வலைத்தளங்களிலிருந்து விடைபெறுகிறேன்.
அன்புடன்,
பிரபாகரன்  

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பல... நன்றிகள் பல...

செல்வா said...

மிக மிக அருமையான தொடர்! நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் நன்றியும். அமைதியாய் அரிய செயலை செய்து நிறைவு செய்துள்ளீர்கள்!